முகப்பு செய்திகள் இந்தியா கொரோனா தொற்று அதிகரிப்பு: மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா தொற்று அதிகரிப்பு: மத்திய அரசு எச்சரிக்கை!

மஹாராஷ்டிரா தவிர்த்து மேலும் 4 மாநிலங்களில், தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட  அறிக்கையில், நேற்று மட்டும் 13,993 பேரிடம் கொரோனா உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,09,77,387 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் 1,43,127 பேர் உள்ளனர். மொத்த பாதிப்பில் இவர்களின் விகிதம் 1.3 சதவீதம் ஆகும்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று மட்டும் அங்கு 6,112 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு சில இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, கேரளா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர் மற்றும் ம.பி., மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பஞ்சாபில், பாதிப்புகள் குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments