வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் சார்பில் போட்டியிட அக்கட்சி நிர்வாகிகளின் வாரிசுகள் போட்டியிட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையடுத்து, ஒவ்வொரு கட்சியும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என தெரிவித்தது. இந்நிலையில் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பிடித்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரபலங்களுக்கு, விருப்ப மனுக்களை தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என மனுக்களை வாங்குகின்றனர்.
திமுகவில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் திமுகவில், வரும் சட்டமன்ற தேர்தலில் நிர்வாகிகளின் வாரிசுகள் 6 பேர், களம் காண தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதியை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் களம் இறக்க நூற்றுக்கணக்கான விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ மோகனின் மகன் கார்த்திக் மோகன், இந்த முறை அண்ணா நகரில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் பேரன் வெற்றியழகன், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன் ஆயிரம் விளக்கு அல்லது தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தமது மகன் சந்தீப் ஆனந்தை, திருத்தணி தொகுதியில் களம் இறக்க முயற்சித்து வருகிறார்.
திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவின் மகன், அருண் நேருவுக்கு அவரது ஆதரவாளர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும்s தகவல்கள் தெரிவிக்கின்றன.