பாஸ்டேக் முறையை கட்டாயமாக்கியதால், சுங்கச் சாவடிகளில் கட்டண வசூல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என்ற நடைமுறை பிப்ரவரி 15 தேதி முதல் நடைமுறைக்கு வந்ததது.
பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஃபாஸ்டாக் மூலமாக வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் 23 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் 102 கோடி ரூபாய் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் பணம் கொடுத்து கட்டணம் செலுத்தும் முறை 10 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.