முகப்பு அரசியல் திமுக தான் எங்களின் எதிரி: பா.ஜ., முருகன்!

திமுக தான் எங்களின் எதிரி: பா.ஜ., முருகன்!

திமுகதான் எங்களின் பிரதான எதிரி என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் பேசினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், பிரதமர் மோடி சென்னை வருகையை தொடர்ந்து கோவைக்கு 25ம் தேதி வருகிறார். தொடர்ந்து தமிழகத்திற்கு பா.ஜ., முக்கிய தலைவர்கள் வருகின்றனர்.

கோவையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஓட்டு சதவீதத்தை பாதிக்காது. விலை உயர்வு தற்காலிகமானது.

விலை குறைப்பு செய்ய மாநில அரசுகளின் வரிகளை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பா.ஜ., பூரண மதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியலின வெளியேற்றம் என்ற கோரிக்கை பரீசிலனையில் உள்ளது.

புதுச்சேரியில் நாராயணசாமி மீது அதிருப்தி இருப்பதால் எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்கின்றனர். கிரண்பேடி நீக்கம் குறித்தோ, புதுச்சேரி விஷயத்தைப் பற்றியோ நான் பேசுவது நன்றாக இருக்காது.

ஊழல்களில் கரைப்படிந்த தி.மு.க., தான் எங்களுடைய பிரதான எதிரி. அதனால் அதை மையமாக வைத்தே எங்களது பிரசாரம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments