முகப்பு அரசியல் என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன், கோபமில்லை; ராகுல்காந்தி!

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன், கோபமில்லை; ராகுல்காந்தி!

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது எனக்கு கோபமில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல்காந்தி ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு சென்ற ராகுல் காந்தி மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி உங்கள் தந்தை கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, எனது தந்தையை இழந்தது என் இதயத்தை பிழந்தது போல் இருந்தது. உங்களில் யாரேனும் தந்தையை இழந்திருந்தால் எனது வலி உங்களுக்கு தெரியும்.

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது எனக்கு கோபமில்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக கல்லூரி மாணவிகளிடம் பேசிய ராகுல், நீங்கள் என்னை சார் என்று அழைக்க வேண்டாம். கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்களை சார் என்று அழையுங்கள். என்னை ராகுல் சார் என்று அழைக்க வேண்டாம்.

ராகுல் அண்ணா என்று வேண்டுமானால் கூப்பிடுங்கள் என்றார். ராகுல் காந்தியின் அழைப்பை அடுத்து அவரை ராகுல் அண்ணா, ராகுல் அண்ணா என்று கல்லூரி மாணவிகள் அழைத்து உற்சாகமாக கலந்துரையாடினார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments