முகப்பு செய்திகள் ஐபோன் 12 நாளை அறிமுகம்!

ஐபோன் 12 நாளை அறிமுகம்!

நாளை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 அறிமுகம் செய்கிறது. உலகம் முழுவதும் ‛ஐபோன்-12′ போன் பற்றிய எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கம். 

‛ஹை ஸ்பீட்’ என்ற வாசகத்துடன் இந்த அறிமுக விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடக்கிறது. அதற்குள் இந்த போன் பற்றிய செய்திகள் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகின்றன.

போன் தவிர ஏர் டேக்ஸ் என்ற ப்ளூடூத் ட்ராக்கர், ஹோப் பாடீ என்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர், இயர் ஹெட்போன் போன்றவற்றையும் அறிமுகப்படுத்துகிறது. ஐபோன் 12ல் 4 மாடல்கள் இருக்கும் என்கிறார்கள்.

ஒவ்வொன்றும் 5.4 இன்ச் முதல் 6.7 இன்ச் வரை அளவில் இருக்கும் எல்லாவற்றிலும் 5ஜி வசதி இருக்கும். ஏ 14 சிப் அதிவேகம் தரும். கேமராவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆக்குமெண்டெட் ரியாலிட்டிக்காக சென்சார் உள்ளது. இவற்றின் விலை 699 டாலர் முதல் 1099 டாலர் வரை இருக்கலாம்.

ஸ்மார்ட் ஸ்பீக்கர் விலை 99 டாலர் வரை வரலாம். மினி ஹோம் பாட் சைஸ் இப்போது உள்ள ஸ்பீக்கரில் பாதிதான் இருக்கும். ஏர்டேக் கருவியை மணிபர்ஸ் சாவி என எதில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

அவை தொலைந்தால் உடனே கண்டுபிடிக்க உதவும். ஆப்பிள் டிவியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் டிவி 4k வசதியுடன் 179 டாலர் விலையில் ஆரம்பிக்கும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு; தமிழக அரசு!

அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை நாளை மாலை 5 மணிக்குள்...

கிரிக்கெட்: ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித்!

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில்...

கிரிக்கெட்: நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றிகள் மேலும் மேலும் குறைய வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது...

தென் மாவட்டங்களுக்கு கனமழை!

புரவி புயல் காரணமாக நாளை மாலை வரை தென் மாவட்டங்களான குமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய...

Recent Comments