புரவி புயல் காரணமாக நாளை மாலை வரை தென் மாவட்டங்களான குமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது
வங்கக் கடலின் தென் மேற்கு பகுதியில் நகர்ந்து வரும் புயல் மேற்கு வட மேற்காக நகர்ந்து இன்று இரவு இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 80 – 90 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும்
புயலின் காரணமாக டிசம்பர் நாலாம் தேதி வரை தென்மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது