பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் வென்ற நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி உடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி விடுப்பில் செல்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் ரோஹித் சர்மாவிற்கு ஐ.பி.எல் 2020 தொடரின் போது காயம் ஏற்பட்டது.
ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெறவில்லை. மேலும் அவர் தனது உடல்தகுதியை இன்று மதியத்திற்குள் பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடாமியில் நிருபிக்க வேண்டுமென பிசிசிஐ கூறியிருந்ததது.
இதையடுத்து பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடாமி சென்ற ரோஹித் சர்மா தனது உடல்தகுதியை வெற்றிகரகமாக நிரூபித்துள்ளார். ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு உடல்தகுதி பெற்றுள்ளார். அவர் உடற்பயிற்சியில் தேர்வு பெற்றுள்ளார் என்றும் இதையடுத்து அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து பிசிசிஐ தான் முடிவு செய்ய வேண்டுமென கிரிக்கெட் அகாடமி நிர்வாகி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி டி20 தொடரை ஹிட்மேன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா ஆகிய வீரர்கள் இல்லாமல் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இதையடுத்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டி உடன் விராட் கோலி இந்திய திரும்ப உள்ள நிலையில் ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித் சர்மா கொரோனா விதிமுறைகளுக்கு உட்படுத்த்ப்பட்டு பின்னர் இந்திய அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.