தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றிகள் மேலும் மேலும் குறைய வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் சேலத்தைச் சேர்ந்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் அறிமுக வாய்ப்பு பெற்றார் ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார்.
நடராஜனுக்கு முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில் இந்தியாவிற்கான தனது முதல் போட்டியிலேயே சவால்கள் நிறைந்த சூழ் நிலையிலும் தனது முத்திரையை பதித்து, வெற்றிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்
இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் செய்தியில் வாழ்த்து தெரிவித்தார்.