2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை சென்னையில் துவங்க உள்ளது. முதல் போட்டில் மும்பை – பெங்களுரு மோதுகிறது.
கொரோனா அச்சம் காரணமாக கடந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படாமல் ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நடைபெற உள்ளன.
நாளை துவங்கும் ஐபிஎல் போட்டிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட 6 நகரங்களில் நடைபெறுகின்றன. இதனிடையே பெங்களூரு அணி வீரர் சாம்ஸ், டெல்லி வீரர் அக்சர் படேல் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை அணியும்-பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலானவை இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கே நடைபெற உள்ளன.
வரும் மே மாதம் 30-ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. நடப்பாண்டின் ஐ.பி.எல் போட்டிகள் அனைத்திற்கும் மைதானத்திற்குள் ரசிகர்கள் இன்றி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.