கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அசுர வேகம் எடுத்துள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மிக அதிக அளவில் பாதிப்பை எதிர்கொள்கின்றன. கடந்தமுறை கொரோனாவால் பாதிக்கப்படாதவர்கள் பலருக்கும் தற்போது கொரோனா பாதித்துவருகிறது.
இந்தநிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி கொரோனாவுக்கான முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.