வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வரும் மாநாடு திரைப்படத்தில் ஆறு நிமிட காட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்து சிம்பு அசத்தியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நாயகனாகவும், கல்யாணி நாயகியாகவும் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, ஒய்.ஜி. மகேந்திரன், வாகை சந்திர சேகர், எஸ் ஏ சந்திர சேகர், அஞ்சனா கீர்த்தி, உதயா, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, கருணாகரன், மகத், டேனியல் போப், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்றைய படப்பிடிப்பின்போது, சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியை எடுத்து கொண்டிருந்த நிலையில், படத்தின் மிக முக்கியமான, கிட்டத்தட்ட ஆறு நிமிடம் கொண்ட ஒரு காட்சியில், ஒரே டேக்கில் நடித்து அசத்தினார் சிலம்பரசன்.
சிலம்பரசன் சிங்கிள் டேக் நடிகர் என்பது அனைவரும் அறிந்தது தான்.. ஆனால் ஆறு நிமிட காட்சியை கூட, ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்ததை கண்டு அசந்துபோன படக்குழுவினர், காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் உடனே கைதட்டல் மூலமாக சிலம்பரசனுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.