நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக உச்ச நீதிமன்ற நீதிபதி, மோகன் எம்.சந்தானகவுடர் மரணமடைந்தார்.
நீதிபதி சந்தானகவுடருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்துள்ளது. குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
ஐ.சி.யூ.,வில் சிகிச்சை பெற்று வந்தவரின் உடல்நிலை சனிக்கிழமை இரவு வரை நன்றாக இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 12.30 மணியளவில் அவர் இறந்துள்ளார். இந்த சோகமான செய்தியை அவரது குடும்பத்தாரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இறந்த நீதிபதிக்கு கொரோனா தொற்று இருந்ததாக என்ற தகவல் உறுதிசெய்யப்படவில்லை. கர்நாடகாவில் மே 5, 1958-ல் பிறந்த மோகன் சந்தானகவுடர், 1980-ல் வழக்கறிஞராக பதிவு செய்தார்.
2003-ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியானார். 2004-ல் அந்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். பின்னர் கேரள உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கப்படுவதற்கு முன்பு, கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார்.