முகப்பு செய்திகள் இந்தியா புதிய அறிகுறிகளுடன் கொரோனாவின் 2-வது அலை!

புதிய அறிகுறிகளுடன் கொரோனாவின் 2-வது அலை!

புதிய வகை அறிகுறிகளுடன் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இடையில் சற்று ஓய்ந்து தற்போது படிப்படியாக மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

சமீப நாட்களில் ஒருநாள் பாதிப்பு மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கூட முழு ஊரடங்கு இல்லாவிட்டாலும் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களாக அதிகரித்து வரும் தொற்று வழக்குகள் கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை மோசமாக இருக்குமோ என்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்களின் மெத்தன போக்கு மற்றும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் உள்ளிட்டவை கவலைகளை அதிகரித்த நிலையில், வைரஸ் தொற்றானது அறிகுறிகளை ஏற்படுத்தும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அசாதாரண அறிகுறிகளிலிருந்து தீவிரமாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுவது வரை தற்போது உள்ள பாதிப்பு வழக்குகளை கையாள்வதில் மருத்துவத்துறை கடுமையாக போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா இரண்டாவது அலையானது, முதல் அலையை விட மிகவும் வித்தியாசமானது என்பதற்கான சான்றாக உள்ளது.

கோவிட் பாசிட்டிவ் நோயாளிகளில் அதிகமாகக் காணப்படும் பிற அறிகுறிகள் மூட்டு வலி, இரைப்பை குடல் சிக்கல்கள், பலவீனம் மற்றும் பசியின்மை ஆகியவையும் அடங்கும்.

சமீபத்திய மாதங்களில் இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைத் தாக்கிய கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை நோய்த்தொற்றின் போது அசாதாரண அறிகுறிகள் மற்றும் ஒரு கோவிட்-காய்ச்சல் அல்லது இருமல் தவிர தெளிவற்ற அறிகுறிகளை கண்டறிவதும் முன்னிலைப்படுத்தப்பட்டது. பெரும்பாலானதொற்று வழக்குகள் அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறி கொண்டவையாக இருக்கலாம்.

இருப்பினும் மருத்துவர்களின் எச்சரிக்கப்படி தற்போது வைரஸ் அதன் போக்கை மாற்றி, உடலில் மிகவும் ஆபத்தான தாக்குதலை தொடங்குவதால், தொற்று நோய்களின் தீவிரமும் இப்போது காணப்படுகிறது.

சரியான நேரத்தில் நிலைமை கட்டுப்படுத்தப்படாவிட்டால், நாட்டின் சுகாதார அமைப்பு வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்படும். சமீப காலமாக நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்புகளில் பல இரைப்பை குடல் புகார்கள் பதிவாவதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

முதல் அலையின் போது இரைப்பை குடல் அறிகுறிகள் காணப்படவில்லை என்றாலும், உடலின் செரிமான அமைப்பில் இருக்கும் ACE2 entry receptors அதிக சுமைக்கு வைரஸ் தன்னை வலுவாக இணைத்து கொண்டு, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்புகள், குமட்டல், வலி மற்றும் வாந்திபோன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த வைரஸ் வயதானவர்களுக்கும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கும் மிகவும் ஆபத்துகளை ஏற்படுத்தும். இருப்பினும் இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதாலும் முன்பு போல் இல்லாமல் , தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற தவறுவதால் இளைஞர்களும் தொற்றால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் உருமாறிய வைரஸிற்கு எதிராக வேலை செய்வது குறித்த கவலைகள் உள்ளன. ஏனெனில் அவை முன் இருந்த வைரசை விட தீவிரம் என்பதால் தடுப்பூசி மூலம் உடலில் உருவான ஆன்டிபாடிகளை எளிதில் வீழ்த்தி தொற்றுநோயை பரப்ப கூடும் என்றும் கவலை எழுந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments