முகப்பு செய்திகள் இந்தியா அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை: மத்திய சுகாதாரத்துறை!

அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை: மத்திய சுகாதாரத்துறை!

கொரோனா பரவலில் அடுத்து வரும் 4 வாரங்கள் மிகவும் நெருக்கடியானவை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது. அது, இந்த மாதத்திலும் தொடர்கிறது. இந்தியாவில் நேற்று முன் தினம் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கொரோனா பரவலில் அடுத்து வரும் 4 வாரங்கள் நெருக்கடியாக இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் ஆகியோர் நிருபர்களுக்குப் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கொரோனாவின் இரண்டாவது அலை முதல் அலையை விட வேகமாக பரவுகிறது. நாம் இதை சமாளிக்க வேண்டும். எதிர்கொள்வதோடு வீழ்த்தவும் வேண்டும். இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும்.

ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை குறைப்பதுதான் தடுப்பூசியின் முக்கிய நோக்கம்.

மருத்துவ துறையில் பணியாற்றுவோரை காப்பாற்றுவது தான், அந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நபர்களை பாதுகாப்பதே ஒரு நாட்டின் நோக்கமாக இருக்கிறது.

யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு தடுப்பூசி போடுவது இலக்கு அல்ல. யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படுமோ அவர்களுக்கு தடுப்பூசி போடுவதோ இலக்கு.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments