காரில் போதைப் பொருள் வைத்திருந்த, பா.ஜ., இளைஞர் அணி பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமியை, போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் தலைநகர் கோல்கட்டாவில், நேற்று மாலை, பா.ஜ., இளைஞர் அணியின் பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமி, காரில் சென்றார். அவருடன், இளைஞர் அணி உறுப்பினர் பிரபிர் குமார் தே என்பவரும் இருந்தார்.அப்போது, அவரின் காரை மறித்து, போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில், காரின் இருக்கைக்கு அடியில் இருந்தும், பமீலாவின் பணப் பையில் இருந்தும், ‘கோகெய்ன்’ என்ற போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டது. 100 கிராம் அளவுக்கு இருந்த, அந்த போதைப் பொருளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, காரில் இருந்த, பமீலா, பிரமிர் குமார் மற்றும் பமீலாவின் பாதுகாவலரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பமீலா கோஸ்வாமியை உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 25ம் தேதி வரை கோர்ட் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.