புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில், மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததால், தானாகவே பெரும்பான்மையை இழந்தது.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை நீக்கம் செய்து சமீபத்தில் குடியரசு தலைவர் அறிவித்தார்.
இதையடுத்து தெலுங்கானா கவர்னராக இருந்த தமிழிசைக்கு கூடுதலாக புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். உடனே, நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் செய்ததையடுத்து காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.
இது குறித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா. ஏற்கனவே, இந்த அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது.
ஆகவே நான் ராஜினாமா செய்வதால் எதுவும் மாறிவிடாது.இந்த அரசில் எனக்கு மரியாதையில்லை,அதிருப்தி உள்ளதை காட்டவே ராஜினாமா செய்தேன் என கருத்து