முகப்பு அரசியல் நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னிலை; முதலமைச்சர் பழனிச்சாமி!

நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னிலை; முதலமைச்சர் பழனிச்சாமி!

இந்தியாவில், தமிழகம் தான் நீர் மேலாண்மையில் முன்னிலையில் உள்ளது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, குன்னத்தூர் ஊராட்சியில், அடிக்கல் நாட்டு விழா நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

விழாவில் 6,941 கோடி ரூபாய் மதிப்பில், காவிரி – தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தின் முதல் கட்டம்; 3,384 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி உப வடிநில பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணி ஆகியவற்றிற்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் பழனிசாமி பேசியதாவது, நீர் மேலாண்மையில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது. பொதுப்பணித்துறைக்கு எண்ணற்ற பொறுப்புகள் உள்ளன. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத அணைகள், குளங்கள், ஏரிகள் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது.

பல்வேறு தடுப்பணைகள் கட்டி வருகிறோம். நாங்கள் சொல்வதை மத்திய அரசு கேட்கிறது என்பதற்கு ‛நடந்தாய் வாழி காவரி‛ திட்ட அனுமதியே சாட்சி. திமுக அனுமதி தந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசின் துணையோடு தடுத்தது அதிமுக அரசு.

காவிரி குண்டாறு திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. என் வாழ்நாள் பிறவிப்பயனை அடைந்ததாக நான் உணர்கிறேன். என் வாழ்வின் மறக்க முடியாதநாள். ஒரு சொட்டு நீரை வீணாக்கக்கூடாது என்பது தான் அரசின் நோக்கம்.

எதை செயல்படுத்துகிறமோ அதையே சொல்வோம். இன்னும் எதை செயல்படுத்த உள்ளோமோ அதை சொல்வோம். காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதை ஸ்டாலின் குறை சொல்கிறார். இந்த திட்டம் வரலாற்று சிறப்பு மிக்க திட்டம். இவ்வாறு அவர் பேசினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments