புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இரு மாநில முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் விவரம் கேட்டறிந்தார்
வங்கக்கடலில் உருவான புரவி புயல் டிசம்பர் 4ம் தேதி குமரி பாம்பன் இடையே கரையைக் கடக்க கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பனில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது ராமநாதபுரம் கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய அதிமழையும் டெல்டா மற்றும் விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்தது
இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்
இதையடுத்து தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்கக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்