2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக – திமுக உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் தங்கள் தொகுதிக்கு விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கடசியின் மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைகளை துவங்கி உள்ளார்.
இதற்காக, சன் டிவியில் ஔிபரப்பாகி வரும் சித்தி -2 நாடக தொடரில் இருந்து விலகி உள்ளார். இனி, சினிமா மற்றும் நாடகத் துறையில் இருந்து விலகி, நான் முழு நேர அரசியலில் ஈடுபட்டு கட்சியை வளர்க்கப் போகிறேன் என்றுள்ளார்.
வேளச்சேரி தொகுதியில் தற்போதைய திமுக எம்.எல்.ஏ.வாக வாகை சந்திரசேகர் உள்ளார். இவர், அடிப்படையில் திமுக உறுப்பினர் என்றாலும், சினிமா மூலம் பிரபலமானவர். ௨௦௧௫ம் ஆண்டு சென்னையில் பெய்த மழையின் காரணமாக வேளச்சேரி தொகுதி மிகவும் பாதிக்கப்பட்டது.
அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த அசோக், அந்நேரத்தில் தொகுதி பக்கம் வராததால், வாகை சந்திரசேகரின் வெற்றி எளிதானது.
சினிமா மற்றும் நாடகத் துறை மூலம் மக்களிடம் பிரபலமான நடிகை ராதிகா வேளச்சேரி தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார். எல்லாம் தேர்தல் முடிந்தபின் தான் தெரியும் வெற்றி யார் பக்கம் என்று.
வேளச்சேரி தொகுதி ராதிகாவுக்கு வெற்றிக்கனியை கொடுக்குமா என்று பார்ப்போம்.