வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைத்துள்ளதால் பதற்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சசாமி அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர், ராஜேந்திர பாலாஜி.
ராஜேந்திர பாலாஜி தனது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்து விட்டன. வழக்கை, தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளிவைத்திருக்கிறது.
வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கின் தீர்ப்பு தனக்கு எதிராக வந்துவிட்டால், தேர்தலில் போட்டியிட முடியாமல் போய் விடுமோ? என்ற அச்சத்தில் இருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.
வழக்கிலிருந்து மீள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு உதவவில்லை என்கிற வருத்தமும் ராஜேந்திர பாலாஜிக்கு இருக்கிறது.
எல்லாத்துக்கும் காலம் தான் பதில் சொல்லணும். பொறுத்திருந்து பார்ப்போம். பால்வளத்துறை அமைச்சருக்கே பால் பொங்குமா என்று!