தருமபுரியில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்திளாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர் சசிகலா உடல் நிலை குணமடைந்து வர வேண்டும் என்று ஒரு பெண்மணியாக அவருக்கு ஆதரவு உண்டு என்றார்.
மேலும் சசிகலா வருகையால் அதிமுக கட்சியில் பாதிப்பு என்பது உட்கட்சி விவகாரம். அதில் தேமுதிக கருத்து சொல் எதுவும் இல்லை என்றார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல என்பது அனைவரும் அறிந்ததுதான் என்று கூறினார். தேமுதிகவை பொருத்தவரை 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக உள்ளது.
கமல்ஹாசன் குறித்து பேசுகையில், மக்களின் ஆதரவு இந்த தேர்தலில் தெரியவரும் என்று கூறிய பிரேமலதா, கூட்டணி குறித்து காலதாமதப் படுத்தாமல் விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் பெற்ற மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்கிறார். ஆனால் ஐந்து முறை ஆட்சி செய்தபோது என்ன செய்தனர், யார் வேண்டுமானாலும் வாக்குறுதி அளிக்கலாம் அனை தை நிறைவேற்றுவதுதான் முக்கியமானது என்றார்.
அதிமுக கூட்டணியில் ஏற்கனவே தேமுதிகவிற்கு கொடுக்கப்பட்ட 41 தொகுதிகளில் போட்டியிட்டது அதேபோல தொகுதி ஒதுக்கீட்டை இந்த சட்டமன்றத் தேர்தலிலும் எதிர்பார்க்கிறோம் என்றார் பிரேமலதா.