முகப்பு செய்திகள் சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள்!

சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள்!

ஆன்மா இருக்கிறது கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடிய சிறந்த சான்று நான் ஆன்மாவைக் கண்டுவிட்டேன். நான் கடவுளைக் கண்டுவிட்டேன் என்று அவர் கூறுவதுதான். நிறைநிலைக்கு அதுதான் ஒரே நியதி.

இந்து சமயம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது. வெறும் நம்பிக்கை அல்ல உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து சமயம்.

இந்துக்களின் சமயம்.நிறைநிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான் .பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அவனுடன் பேரானந்தத் தில் திளைக்கிறான்.

தீமை செய்கின்ற ஆயிரம் பேரைக் கொல்வதன் மூலம் தீமையை உலகத்திலிருந்து நீக்க முயல்வதால் உலகத்தில் தீமைதான் அதிகமாகும். ஆனால் அறிவுரைகளின் மூலம் மக்கள் தீமை செய்யாமல் தடுக்கப்பட்டால் உலகத்தில் தீமையே இருக்காது.

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம்

வேட்டைகாரனின் மனைவி, அவள் கணவன் கொண்டு வரும் விலங்குகளின் மாமிசத்தை எடுத்து கொண்டு, அவற்றின் விலை உயர்த்த கொம்புகள், தந்தங்களை தூக்கி எரிந்து விடுவாள். அது போல் ஒரு துறையை பற்றி அறிவு இல்லாதவர்கள் அதை தூக்கி எறிவதில், குறைத்து பேசுவதில் ஒன்று ஆச்சரியம் இல்லை.

நாலடியார்

நிலையாமையும், நோயும், மூப்பும், சாவுத் துன்பமும் இவ்வுடம்புக்கு உண்டு என ஞான நூல்களை ஆய்ந்துணர்ந்த, சிறந்த அறிவுடையோர் தமக்கு உறுதியான தவத்தைச் செய்வர். முடிவில்லாத இலக்கணநூல் என்று சொல்லப்பட்ட பல நூல்களையே விடாமல் சொல்லிக்கொண்டு திரியும் பித்தரைவிட அறிவில்லாதவர் உலகில் இல்லை!

திரிகடுகம்

அன்பு நிறைந்த படையும், பகைவர் பலர் கூடி எதிர்ப்பினும் அஞ்சாத அரணும், எண்ண முடியாத அளவிற்கு இருக்கும் செல்வமும், ஆகிய இம்மூன்றும், பூமியை ஆள்கின்ற வேந்தர்க்கு உறுப்புகளாகும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments