நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில், சமுத்திரக்கனிக்கு ஜோடியாக, நடிகை வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சன் டிவியின் சந்திரலேகா தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்த வனிதா விஜயகுமார் பின்னர் குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இதையடுத்து பனங்காட்டு படை ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் ஹரி நாடாருக்கு ஜோடியாக ‘2K அழகானது ஒரு காதல்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமான வனிதா, பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்நிலையில் ‘அந்தகன்’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் சமுத்திரகனிக்கு தான் ஜோடியாக நடிப்பதை தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் வனிதா விஜயகுமார்.
இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் ‘அந்தகன்’ படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.
பிரசாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சிம்ரன், கார்த்திக், ப்ரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, சமுத்திரகனி வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.