ஆந்திர ஓட்டல் ஒன்றில், மாஸ்க் அணிந்து பேசும்படி கூறிய பெண் ஊழியரை, துணை மேலாளர் கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில், அம்மாநில சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் துணை மேலாளராக பாஸ்கர் என்பவர் உள்ளார். அவர் மாஸ்க் அணியாமல் ஊழியர்களிடம் பேசியதாக தெரிகிறது.
அவரை மாஸ்க் அணிந்து பேசும்படி சக பெண் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திமடைந்த துணை மேலாளர், அப்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார்.
ஆத்திரம் அடங்காத அவர், பெண்ணை கீழே தள்ளி, தலைமுடியை பிடித்து அடித்தும், கட்டையால் கடுமையாக தாக்கியும் உள்ளார். ஜூன் 27ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான புகாரில், நெல்லூர் போலீசார் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.