சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு பெய்த கனமழையை விட, வரும் ஆண்டுகளில் 10 மடங்கு அதிக மழை பெய்வதுடன், பெருவெள்ளம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில், கடந்த 2015ம் ஆண்டு நவ.,30 முதல் டிச.,4 வரை கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக 33.32 சதவீதம் பெய்த இந்த மழையால், சென்னை வெள்ளத்தில் மிதந்தது.
இந்நிலையில், கடலோர நகரங்களில் பருவநிலை மாற்றம், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கோல்கட்டா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இந்தியாவின் கடலோர நகரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
பருவநிலையில் செயற்கையாக திணிக்கப்படும் மாற்றங்களால், வரும் ஆண்டுகளில், 2015ம் ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையை விட, அதிக மழை பெய்ய 10 மடங்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 233.9 சதவீதம் அளவுக்கு பெய்யவிருக்கும் இந்த மழை பொழிவால், பெருவெள்ளம் ஏற்படும் எனவும் ஐஐடி எச்சரித்துள்ளது.