கர்நாடகாவில் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கன்னட நடிகை ராகினி திவேதியை இன்று பெங்களூர் நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை பரவலாக நடப்பதாக எழுந்த புகாரில் சின்னத்திரை நடிகை உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் கன்னட திரை உலக பிரபலங்கள் பலரும் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கன்னட நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணை நடத்த வேண்டி இன்று நேரில் ஆஜராக சம்மன அனுப்பியிருந்தனர்.
அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானதையடுத்து உஷாரான போலீசார் அவரது வீட்டில் இன்று மாலை ரெய்டு நடத்தினர். வீட்டில் இருந்த நிலையில் அவரை கைது செய்தனர்.