5 மாநில சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக 23ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. இதனையடுத்து அன்றைய தினமே தேர்தல் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மே.வங்கம், அசாம் மாநில சட்டசபைகளில் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், அங்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று, தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
சட்டசபை தேர்தல் தொடர்பாக வரும் 23ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தல் தேதி குறித்து முடிவு செய்வதற்காக நடக்க உள்ளதாக தெரிகிறது.
தேர்தல் ஆணையம், துணை ஆணையர்கள் குழுவினர் கூடி தேர்தல் அட்டவணையை இறுதி செய்ய உள்ளது.