கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசுப் அலி சென்ற தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், மயிரிழையில் உயிர் தப்பினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லூலூ குழுமத்தின் ( LuLu Group) தலைவரான யூசுப் அலி, பயணித்த ஹெலிகாப்டர் கொச்சியின் புறநகர்ப் பகுதியில் விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் இவருடன் 6 பேர் பயணித்தனர். அப்பகுதியில் கடும் காற்றுடன் மழையும் பெய்ததால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். விமானி சமாளித்து விமானத்தைச் செலுத்தியதால், சதுப்பு நிலப் பரப்பில் விமானம் தரையிறக்கப்பட்டது.
யூசுப் அலி மற்றும் அவருடன் பயணித்த 6 பேரும் மயிரிழையில் உயிர் தப்பினர். மேலும் அவர்களுக்குச் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.