முகப்பு செய்திகள் கொரோனா: முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 659 பேர் மீது வழக்கு!

கொரோனா: முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 659 பேர் மீது வழக்கு!

சென்னையில் நேற்று மட்டும் முகக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 659 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது.

தொற்றின் பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னை காவல்துறையினரும் முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனடிப்படையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த 659 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 22 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் தேதி முதல் ஆயிரத்து 118 பேர் மீது முகக்கவசம் அணியாமல் வாகனம் ஒட்டியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீதும் இதுவரை 4 வழக்குகள் பதியப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

Recent Comments