ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு, அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என, தெரிகிறது.
தமிழக மக்களுக்கும், ரசிகர்களுக்கும் இதுவரை ஒன்றும் செய்யாத ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து தமிழக மக்களை காப்பாற்றப் போவதாக தனது ஒவ்வொரு படத்தின் ரிலீசின் போது அறிவிப்பார்.
அந்த அறிவிப்பு அவ்வப்போது நடக்கும். இந்நிலையில் மீண்டும் மக்களை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என, நம்பப்படும் ரஜினி, தன் அரசியல் கட்சியின் பெயர் மற்றும் முதல்வர் வேட்பாளரை, அடுத்தாண்டு பிப்ரவரியில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தலுக்கு, மூன்று மாதத்திற்கு முன்னதாக பெயரை அறிவிக்க, ரஜினி திட்டமிட்டுள்ளார். அதன்பின், ஒரே கட்டத்தில் முழுமூச்சாக தேர்தல் பணியில் ஈடுபடவும், அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக மக்களை ரஜினிகாந்த் எப்படி காப்பாற்றுவார் பொறுத்திருந்து பார்ப்போம்.