2021ம் மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி கூட சேரலாம் என அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போதைய கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக் காண கூட்டணி சட்டமன்ற தேர்தலுக்காக வேறு கூட்டணி அமைக்கப்படும்
கூட்டணியில் அதிமுகவும் இருக்கலாம் அல்லது திமுகவும் இருக்கலாம் அல்லது இரண்டுமே இல்லாமல் நாங்களே எங்கள் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க முயற்சிக்கலாம் இது எல்லாவற்றிற்கும் வாய்ப்புள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்