ஜெயலலிதாவின் தோழி சசிகலா இளவரசி சுதாகரன் உள்ளிட்டோரின் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது
கடந்த 2010ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சசிகலா சொந்தமான 150க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் சோதனையின் தொடர்ச்சியாக சொத்துக்களை முடக்கும் முயற்சியில் வருமானவரித் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் ஒரு கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் சசிகலாவின் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது
அதோடு ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிலும் நோடிஸ் ஒட்டியது அதன் தொடர்ச்சியாக தற்போது சிறுதாவூர் பங்களா கோடநாடு எஸ்டேட் ஆகிய சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது
இப்படி சொத்துக்களை வருமான வரித்துறையினர் வருவது சசிகலா தரப்பினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது