மகப்பேறு நேரத்தில் மனைவி உடன் இருக்க இ-பாஸ் கிடைக்காத விரக்தியில் காஞ்சிபுரத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷவரனின், மனைவி ரோஜா, பிரசவத்திற்காக தாம்பரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். இரண்டு நாட்களில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக கூறியதை அடுத்து, தாம்பரம் செல்ல இ-பாஸுக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், அது கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் பிரசவ வலி காரணமாக இன்று காலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ரோஜா அனுமதிக்கப்பட்டார். இதை தெரிவிப்பதற்காக விக்னேஷ்வருனுக்கு தொடர்பு கொண்டபோது, அவர் செல்போனை எடுக்கவில்லை.
இதையடுத்து, அவரின் நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வீட்டில் சென்று பார்த்த போது, விக்னேஸ்வரன் தூக்கில் தொங்கியவாறு சடலமாக கிடந்துள்ளார். உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.