வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஓதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் சட்டப் பேரவையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் பழனிசாமி இன்று தாக்கல் செய்தார்.
வன்னியர் இட ஒதுக்கீடு சட்ட மசோதா மீது விவாதம் என்பது உடனடியாக நடைபெற்றது. விவாதத்தை தொடர்ந்து இந்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.