முகப்பு அரசியல் தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமல்; சத்யபிரதா சாஹூ!

தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமல்; சத்யபிரதா சாஹூ!

0
6

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்ப்பட்டுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதாக மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அறிவித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நியைில் தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ, அனைத்து கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், அரசு துறை செயலாளர்கள், துறைகளின் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டப்பின் புதிய திட்டங்களையோ, அல்லது புதிய உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது என்றும் இறுதியாக பிறப்பித்த அரசாணை குறித்த தகவல்களை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் – தேர்தல் அட்டவணை

ஒரே கட்டமாக தேர்தல் 234 தொகுதிகள்

1. வேட்பு மனு தாக்கல் துவக்கம்: மார்ச் 10
2.வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: மார்ச் 19
3. வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 20
4. வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 22
5. வாக்குப் பதிவு நாள்: ஏப்ரல் 6
6. வாக்கு எண்ணிக்கை நாள்: மே 2

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்