முகப்பு சினிமா  ஷூட்டிங்கின் போது விபத்து; தவறி விழுந்த நடிகை!

ஷூட்டிங்கின் போது விபத்து; தவறி விழுந்த நடிகை!

0
8

நிதின் உடன் ‘செக்’ என்ற தெலுங்கு படத்தில் பாடல் காட்சியின் போது நடந்த விபத்தில் நடிகை ப்ரியா வாரியர் காயமடைந்தார்.

2018-ம் ஆண்டு யூடியூபில் வெளியான‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தின் ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் நடித்து பிரபலமானவர் ப்ரியா வாரியர்.

அந்தப் பாடலில் அவரது கண் சிமிட்டல் பலரையும் ஈர்த்தது. அதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் பெற்றார்.

தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது நிதின் உடன் ‘செக்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் போது நடிகர் ஓடிவந்து நடிகர் நிதினின் முதுகில் ஏறுவதற்கு பதிலாக தவறி கீழே விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த நபர்கள் ஓடி வந்து ப்ரியாவுக்கு உதவினர்.

தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறி கீழே விழுந்த வீடியோவை ப்ரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் பணியாற்றுமாறு அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

நிதின், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘செக்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்