பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு பிப்ரவரி 9-ம் தேதி துவங்குகிறது.
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், ரேடியோ டெக்னாலஜி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உள்ளிட்ட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன.
அதன்படி, அரசுக் கல்லூரிகளில் உள்ள 1,590 இடங்களுக்கும், தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் 13,858 இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்த மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டது.
அதன்படி, துணை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. மொத்தமாக 38,244 விண்ணப்பம் பெறப்பட்டது. அதில், 37,334 விண்ணப்பங்களே ஏற்கப்பட்டன.
இந்நிலையில், தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கான தற்காலிக தரவரிசை பட்டியல் வெளியிட்டு ஆன்லைன் கலந்தாய்வு தொடர்பாக மருத்துவ கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 9-ம் தேதி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு துவங்குகிறது.
முதற்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கும், 10-ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கவுள்ளது. தற்காலிக தரவரிசைப் பட்டியலைக் காண: https://tnmedicalselection.net/news/04022021043750.pdf என்ற இணைய முகவரியை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.