முகப்பு செய்திகள் மனைவியின் நிர்வாண படத்தை முகநூலில் பதிவிட்ட கணவர் கைது!

மனைவியின் நிர்வாண படத்தை முகநூலில் பதிவிட்ட கணவர் கைது!

சென்னை அயனாவரம் பழனியப்பா தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (28) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவருக்கு 2010ம் ஆண்டு சார்லஸ் என்பவருடன் திருமணமாகி, அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் இருவரும் பிரிந்தனர்.

அதன்பின், திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவருடன் முத்துலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொண்டனர். விஜயபாரதி அடிக்கடி பணம் கேட்டு முத்துலட்சுமிiய துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் தரவில்லை என்றால் உனது ஆபாசப் புகைப்படத்தை வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி கணவருடன் சண்டை போட்டு, வில்லிவாக்கத்தில் உள்ள தனது அம்மாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

தொலைபேசி மூலம் பணம் வேண்டும் என தொடர்ந்து விஜயபாரதி தனது மனைவி முத்துலட்சுமிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமியின் நிர்வாணப் புகைப்படத்தை பேஸ்புக்கில் விஜயபாரதி வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

முத்துலட்சுமியின் உறவினர் ஸ்ரீதரன் கொடுத்த புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாரதியை கைது செய்தனர்

விசாரணையில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியது, ஃபேஸ்புக்கில் நிர்வாணப் படத்தை வெளியிட்டது ஆகியவை உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அயனாவரம் போலீசார்  விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

கிரிக்கெட்: ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித்!

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில்...

கிரிக்கெட்: நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றிகள் மேலும் மேலும் குறைய வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது...

தென் மாவட்டங்களுக்கு கனமழை!

புரவி புயல் காரணமாக நாளை மாலை வரை தென் மாவட்டங்களான குமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய...

புரவி புயல்: முதல்வருடன் பிரதமர் பேச்சு!

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இரு மாநில முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் விவரம் கேட்டறிந்தார் வங்கக்கடலில்...

Recent Comments