கர்நாடக மாநிலத்திலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி அஷோக் கஸ்தி கொரோனாவால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் ராஜ்யசபா எம்.பியாக தேர்வானவர் அஷோக் கஸ்தி, பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவர். கடந்த ஜூலை 22ம் தேதி ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றிருந்தார். கடந்த் 2ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மனிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டதால், வெண்டிலேட்டரில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அசோக் கஸ்தி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அசோக் கஸ்தியின் மறைவு பாஜகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த எம்.பி அசோக் கஸ்தி,18 வயதிலேயே பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். அக்கட்சியின் மாணவர் அமைப்பான ஏபிவியின் மாநில தலைவராக பணிபுரிந்துள்ளார்.