முகப்புஆன்மிகம் சதுரகிரி: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

சதுரகிரி: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

கொரோனா பரவல் காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இம்மலைக் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் என மொத்தம் 8 தினங்களில் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், மலையேறுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்துள்ளார்.

இந்த அறிவிப்பானது சதுரகிரி கோயிலை நம்பியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக வருவாய் இழப்பை சந்தித்து வருவதால், வாங்கிய கடனைக் கூட செலுத்த முடியவில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -

Most Popular

Recent Comments