போதைப் பொருள் தொடர்பாக நடந்த ரெய்டில், பிரபல கன்னட நடிகை ஷ்வேதா குமாரி கைது செய்யப்பட்டிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய ரெய்டில், தெலுங்கு நடிகை ஷ்வேதா குமாரியை கைது செய்துள்ளனர். மும்பை, தானே மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுடன் நடிகைக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே கூறுகையில், “ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷ்வேதா குமாரி என்பவருக்கு ‘mephedrone’ எனும் ஒரு வகையான போதைப் பொருள் விற்கும் கூட்டத்துடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கன்னடத்தில் ரிங் மாஸ்டர் உட்பட சில படங்களிலும் தெலுங்கில் சில படங்களில் ஷ்வேதா குமாரி நடித்துள்ளார். போதைப் பொருள் வழக்கில் தென்னிந்திய நடிகை கைது செய்யப்பட்டிருப்பது கன்னட சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.