தேசிய அளவிலான கொரோனா பாதிப்பு குறித்த மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,10,129 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இறப்பின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இந்தநிலையில், தேசிய அளவிலான கொரோனா பாதிப்பு தொடர்பாக மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமரின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அவசர கால திட்டத்தை வகுக்க வேண்டும். மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்து புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.