திருவையாறு அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ௧௫ பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சியில், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த 2 பேர் கலந்து கொண்டனர். அந்த இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில், 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில். நடுக்கடை ஷாஜகான் தெரு, மைதீன் தெரு ஆகிய பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், திருமணத்தில் கலந்துகொண்ட 15 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.