இந்தியாவில் சீன மொபைல் ஆப்களான பப்ஜி உள்ளிட்ட 118 ஆப்கள் தடை செய்யப்பட்ட நிலையில், கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பப்ஜி நீக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில், இரு மாதங்களுக்கு முன், ‘டிக்டாக்’ உட்பட, சீனாவின், 59 செயலிகளுக்கு, இந்தியா தடை விதித்தது.
உள்நாட்டு பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றுக்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம், சீனாவைச் சேர்ந்த, பப்ஜி உள்ளிட்ட மேலும், 118 செயலிகளுக்கு, மத்திய அரசு தடை விதித்து உள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பப்ஜி நீக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏற்கனவே பப்ஜியை டவுன்லோடு செய்தவர்கள், பப்ஜி சர்வரை இந்திய அரசு நிறுத்தும் வரை, தொடர்ந்து விளையாடலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அதனை அப்டேட் செய்ய முடியாது.