முகப்பு செய்திகள் நில அளவீட்டு கட்டணம் 40 மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

நில அளவீட்டு கட்டணம் 40 மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு!

நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் தொடர்பான அரசாணையை தமிழக அரசின் வருவாய்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் 50 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. புல எல்லைகளை சுட்டிக்காட்டும் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும், கோணமானி மூலம் பக்க எல்லைகளை சுட்டிக்காட்ட 30 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


மேல் முறையீட்டின் பேரில் மறு அளவீட்டு புன்செய் நிலத்திற்கு 60 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீட்டு நன்செய் நிலத்திற்கு 60 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.  நில அளவை தொடர்பாக அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையை ஏற்று, கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Most Popular

கிரிக்கெட்: ஆஸ்திரேலியா செல்லும் ரோஹித்!

பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஹிட்மேன் ரோஹித் சர்மா தனது உடல் தகுதியை நிரூபித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில்...

கிரிக்கெட்: நடராஜனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வெற்றிகள் மேலும் மேலும் குறைய வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3வது...

தென் மாவட்டங்களுக்கு கனமழை!

புரவி புயல் காரணமாக நாளை மாலை வரை தென் மாவட்டங்களான குமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய...

புரவி புயல்: முதல்வருடன் பிரதமர் பேச்சு!

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இரு மாநில முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் விவரம் கேட்டறிந்தார் வங்கக்கடலில்...

Recent Comments