செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் புதிய மேம்பாலத்தை பயன்பாட்டிற்காக இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அதை விமர்சித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“கொரோனா தொற்று குறையாத நிலையில், சென்னை பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கொரோனா விதிகளை மீறி முதல்வரே நடந்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
அரசின் விதிகளை முதலமைச்சரே மதிக்காமல் அரசு விழாவை நடத்தினால் மற்றவர்கள் எப்படி அதனை மதிப்பார்கள்? அ.தி.மு.க. தொண்டர்களைப் பற்றி முதலமைச்சருக்கு அக்கறையில்லாமல் இருக்க்லாம். ஆனால் பொது மக்கள் பாதிப்படையக் கூடாது
மேடைக்கு மேடை, ‘தனி மனித இடைவெளி அவசியம்’, ‘அவசியமின்றி யாரும் வெளியே வரவேண்டாம்’, ‘பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும்’ என்றெல்லாம் பேசி வரும் முதலமைச்சர் னே பொதுநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதோடு, தான் செல்லுமிடமெல்லாம் மக்களை திரட்டிவைப்பது ஏன்?’ என்று குறிப்பிட்டுள்ளார்