பாண்டிய பேரரசனின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்து, பாண்டிய மன்னன் குதிரை வாங்குவதற்காக வழங்கிய பொன்னை தனக்காக கோயில் கட்டி தன்னையே நினைந்து கசிந்துருகி வாழ்ந்த மாணிக்கவாசகருக்காக மதுரையம்பதியின் மண்ணை சுமந்த சிவனின் திருக்கோல நிகழ்வே பிட்டுக்கு மண் சுமந்த படலம்.
திருவிளையாடற் புராணத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வு இன்றைக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்து பின்பற்ற வேண்டிய ஒன்றெனில் அது மிகைச் சொல்லன்று
‘அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவமாட்டான்’ என்பது பழமொழி.
ஆண்டவனின் திருவடியைப் பற்றினால் அனைத்திலும் வெற்றி காணலாம் என்பதைக் குறிக்கும் விதத்திலேயே அந்தப் பழமொழி அமைந்திருக்கின்றது.
அப்படிப்பட்ட ஆண்டவனே, ‘அடி’ வாங்கித் திருவிளையாடல் நடத்திய மாதம் தான் ஆவணி.
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம் படிபட்ட திருநாள், ஆவணி மாதம் மூலம் நட்சத்திரம் ஆகும்.
அன்றைய தினம் சிவாலயங்கள் தோறும் பிட்டுக்கு மண் சுமந்த திருநாளைக் கொண்டாடுவார்கள்.
அதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
இறைவனே வேலை பார்த்துச் சம்பளம் வாங்கிய நாள் என்பதால், உத்தியோகத்தில் பிரச்சினை இருப்பவர்கள், அன்றைய தினம் உள்ளன்போடு சிவபெருமானை வழிபட்டால் பிரச்சினை விலகும்.
எதிர்ப்புகள் அகன்று இனிய வாழ்க்கை அமையும்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இந்த விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆவணி மூல பிட்டுக்கு மண் சுமந்த வழிபாட்டில் கலந்து கொண்டால், மூல நட்சத்திர தோஷங்கள் விலகி ஓடும். முன்னேற்றங்கள் வந்து சேரும்.
மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் இருபாலரும் அவசியம் இந்த விழாவில் கலந்து கொள்வது நல்லது.
சகல ஆலயங்களிலும் நடைபெறும் புட்டுத் திருவிழாவில் கலந்து கொண்டால், உத்தியோக முயற்சியில் வெற்றி, பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும்.
இறைவனான சொக்கநாதர் மாணிக்கவாசகருக்காக நரிகளை பரியாக்கி அழைத்துவந்து பின் பரிகளை நரிகளாக்கியதால் மனமனன் அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரின் மாயச் செயலாலேயே குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறிவிட்டதாகக் கருதி மாணிக்கவாசகரின்
கை மற்றும் கால்களில் பாங்கற்களை ஏற்றி வைத்து வெற்று உடம்புடன் நண்பகலில் வையை ஆற்று மண்ணில் படுக்கச் செய்யும்படி தண்டனை வழங்கினான்
மாணிக்கவாசகர் ஆற்றுமண்ணின் சூடு தாங்காமல் அலறித் துடித்தார்.
“இறைவா, இது என்ன சோதனை?. என்னைக் காப்பாற்றுங்கள்” என்று உருகினார்.
மாணிக்கவாசகரின் குரல் கேட்டு உருகிய இறைவனார் அவருக்கு அருள் செய்யும் நோக்கம் கொண்டார்.
இறைவனாரின் திருவருளால் மழை ஏதும் பெய்யாமல் வையையில் தண்ணீர் வரச்செய்து வையை பொங்கி எழச்செய்தார்.
பொங்கி எழந்த வையை நதியிலிருந்து பெருகி வந்த வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருப்பதற்கு
வைகையில் ஏற்பட்ட வெள்ளம் அடைக்க ”அவர்வர் பங்குகளை அடையுங்கள்” என்று பறைசாற்றி அழைத்தனர் .
தனக்கென்று விடப்பட்ட பகுதியை அடைப்பதற்குக் கூலியாள் கிடைக்காமல் பெரிதும் வருந்திய பிட்டு விற்றுப் பிழைத்து வந்த வந்தி சோமசுந்தரப் பெருமானை நினைத்து ஆலவாய் அண்ணலே! பிட்டு விற்றுப் பிழைக்கும் ஏழை, நானோ அனாதை எனக்கு கூலியாள் கிடைக்க மாட்டானா?என்று அழுது வருத்தினார்.
வந்தியின் சோகக்குரலுக்கு செவிசாய்த்து கூலியாளாக வந்தார் .
“கூலி தந்து என்னை வேலைக்கு வைத்துக் கொள்பவர் உண்டா?” என்று கூவிக் கொண்டே வந்தார்.
கூலியின் குரலைக் கேட்டு மகிழ்ந்த வந்தி “எனது பங்குக்கு விடப்பட்டகரையை அடைத்து தருவாயா? என்று கேட்டார்.
அடைத்து தருகிறேன் எனக்கு கூலி என்ன தருவாய் ?என்று பெருமான் கேட்டார்.
நான் விற்கும் பிட்டை தருகிறேன் என்றார் வந்தி.
எனக்கு மிகுந்த பசியாக இருக்கு உதிர்ந்தபிட்டை கொடு உண்டு இளைப்பாறி உன் பங்கு இடத்தை அடைக்கிறேன் என்றார்.
ஆனால் சிறுபிள்ளை போல் கொஞ்சம் மண்ணைகூடையில் எடுத்து போடுவதும், கூடையை தண்ணீரில் போடுவதும் பின் எடுப்பதும் என்று விளையாடி அதில் களைத்து வந்தி கொடுத்த பிட்டை தின்று நீர்
அருந்தி பக்கத்தில் உள்ளவர்களுக்கும்
பிட்டை பகிர்ந்து அளித்தும் விளையாடினார்.
வேலை வாங்குவோர் கையில் பிரம்புடன் வந்து உன் பங்கு மட்டும் அடைபடாமல் இருக்கே என்று கேட்டனர்.
அவர் அழகில் மயங்கி அடிக்க மனம் இல்லாமல் இவன் பித்தனா? எத்தனா? சித்தனா?
மன்னரிடம் சொல்வதே முறை என மன்னரிடம் கூறினர்.
அழகில் சிறந்த இந்த கூலியாள் பகுதி மட்டும் அடைபடவில்லை, ஆடியும் ஓடியும் களித்துக் கொண்டு இருக்கிறான் என்றனர்.
அரிமர்த்தன பாண்டியனுக்கு கோபம் வந்து கரையடைப்பானை அழைத்து பொற்பிரம்பால் ஓங்கி அடித்தான்.
உடனே கூலியாக வந்த சோமசுந்தரப் பெருமான் கூடையுடன் மண்ணை கரையில் கொட்டி மறைந்தருளினார்.
இறைவன் முதுகில்
பட்ட அடி அனைத்து ஜீவராசிகள் மேலும் ஈரேழு புவனங்கள் மீதும் பட்டது..
கர்ப்பத்தில் தரித்த உருவமே இல்லாத சிசுவுக்குமே அந்த
தழும்பு இருந்ததாம்.
ஏனெனில் இறைவன் அனைவரின் உயிரிலும் கலந்தவர்
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் எண்ணில் கலந்தே இருக்கின்றான் பண்ணில் கலந்தான் என்பாட்டில் கலந்தான் உயிரில் கலந்தான் கருணை கலந்து
(வள்ளலார்)
அவனை ஒழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறறி யேனே
சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை
அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை
அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது.
அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.
முப்பத்து முக்கோடி தேவர்கள் மீதும் விழுந்த முழு பிரம்படி நம் அப்பனுக்கு மட்டும் பாதி அடியே விழுந்தது.
மீதமுள்ள பாதி அடி அர்த்தநாரீஸ்வரனின் உடலில் இடம் கொண்ட உமையம்மை மீது விழுந்தது.
வானத்தில் காட்சி அளித்து “செங்கோற் பாண்டியா! உன் பொருள்கனைத்தும் அறவழியிலே தொகுப்பட்டுத் தூய்மையாக விளங்கியவை. அவையனைத்தும் நமக்கும் நம்முடைய மெய்யடியார்களுக்கும் திருவாதவூரன் பக்தியுடன் கொடுத்தான்.
அவனை துன்ப படுத்தினாய்.
அதனால் நரியை பரிகளாக்கினோம், பரிகளை மீண்டும் நரிகளாக்கினோம்..
மறுதினமும் கொடுமை படுத்தினாய் அதனால் வைகையில் வெள்ளம் பெருக செய்தோம்.
வந்தியின் துயர் நீக்க கூலிக்காரனாக வந்தோம், பிட்டுண்டோம், உம்மிடம் பிரம்படி பட்டோம்.
வாதவூரானை அவனது விருப்பத்தின்படியே விட்டுவிடுக. நீயும் கனமதுர நீள் செளக்ய சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழ்ந்திருபாயாக !”
என்று கூறினார்.
விண்ணிலிருந்து வந்த தெய்வதிருமொழி கேட்டு மாணிக்கவாசக பெருமானை கண்டு
அவர் அடிகளில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்கும் படி வேண்டினான்.
ஒரே வரியில் மாணிக்கவாசகர் சுவாமி கூறினார் இறைவன் சிவபெருமானைப் பார்த்து
நீ பித்தன் னு சுந்தரர் சொன்னது பொய்னு நினைச்சேன்.
ஆனால் அது உண்மை தான் நீ சாதரண பித்தன் இல்ல, பெருந்துறை வளர் பெரும் பித்தன் னு கூறினார்.
பிட்டுக்கு மண் சுமந்த பெருந்துறை வளர் பெரும் பித்தனே
ஏன் பித்தன்?
பித்தனிடம் ஒன்று போய்விட்டால் அது திரும்ப வராது .
அதுபோல பித்தன் சிவபெருமானிடம்
அடியார் பக்தர்கள் சென்றால் எங்கும்
எதிலும் நம்மை தடுத்தாட்கொள்வான்
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் அவர்கே ஆளாவோம் எழுபிறப்பும்