தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாககக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நி்லையில், தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில், கொரோனா தொற்றால் தமிழகத்தில் இனி ஒரு உயிர் கூட பலியாககக்கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் டெம்ரெசிவர் மருந்து அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.