கொரோனா காரணமாக இந்தியாவில் இந்தாண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடந்திருக்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளைச் சேர்ந்த வீரர்களும், பிசிசிஐ அதிகாரிகளும் அமீரக நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை அணியில் 13 பேர் மற்றும் 2 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து போட்டிகள் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
இதனையடுத்து திட்டமிட்டபடி வரும் 17ம் தேதி முதல் நவம்பர் மாதம் 10ம் தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அமீரக நாடுகளில் நடைபெற உள்ளன. முதல் போட்டி மும்பை-சென்னை அணிகள் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.